/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நீர்திறப்பு 500 கனஅடியாக குறைப்புமின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தம்

ADDED : டிச 22, 2024 12:56 AM
நீர்திறப்பு 500 கனஅடியாக குறைப்புமின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தம்
மேட்டூர், டிச. 22-
மேட்டூர் அணை நீர்திறப்பு வினாடிக்கு, 500 கன அடியாக குறைக்கப்பட்டதால், அணை, கதவணை மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் குறைந்ததால், நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு, 3,004 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று, 2,938 கனஅடியாக சரிந்தது. புதுச்சேரி, காரைக்கால், கடலுார், நாகை மாவட்டங்களில் மழை பெய்ய
வாய்ப்புள்ளதால் வினாடிக்கு, 1,000 கன அடியாக இருந்த, மேட்டூர் அணை குடிநீர், பாசன நீர் திறப்பு நேற்று முன்தினம் காலை முதல், 500 கனஅடியாக குறைக்கப்பட்டது. நேற்று அணை நீர்மட்டம், 119.12 அடி, நீர் இருப்பு, 92.07 டி.எம்.சி.,யாக இருந்தது.
465 மெகாவாட்
மேட்டூர் அணை, சுரங்க மின் நிலையங்களில், 250 மெகாவாட்; 7 கதவணை நிலையங்களில் தலா, 30 வீதம், 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யலாம். சில நாட்களாக, 1,000 கனஅடி நீர் திறந்ததால் அணை, சுரங்க மின் நிலையத்தில், 10 மெகாவாட், கதவணைகளில் மாலை, 6:00 முதல் இரவு, 10:00 மணி வரை, 6 முதல், 8 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
பாசன நீர் திறப்பு நேற்று முன்தினம் முதல், 500 கன அடியாக குறைக்கப்பட்டதால், அணை, சுரங்க, கதவணை மின் நிலையங்களில் மின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டது. மொத்தம், 2,322 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட தமிழக நீர்மின் நிலையங்களில் நேற்று, 465 மெகாவாட் மின்சாரம் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டது.