/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓட்டலில் உணவுக்கு பணம் தர மறுப்பு; டேபிளையும் உடைத்த ஊர்காவல் படை வீரருக்கு வலை

ADDED : அக் 30, 2024 06:42 AM
ஆத்துார்: ஓட்டலில், 'பார்சல்' வாங்கிய உணவுக்கு பணம் தர மறுத்து டேபிளை உடைத்த ஊர்காவல் படை வீரரை, போலீசார் தேடுகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே அம்மம்பாளையம் பஸ் ஸ்டாப்பை சேர்ந்தவர் உமா, 45. அதே பகுதியில் பேக்கரி, ஓட்டல் நடத்துகிறார். அங்கு நேற்று முன்தினம் இரவு அதே ஊரை சேர்ந்த, ஊர்காவல் படை வீரரான பிரவீன், 25, பார்சல் உணவு வாங்கினார். அதற்கு, 300 ரூபாய் கேட்ட பெண் பணியாளரை, பிரவீன் தள்ளிவிட்டுள்ளார். தொடர்ந்து அவர், 'போலீசில் பணிபுரிவதாகவும், என்னிடம் பணம் கேட்கிறீர்களா? கடையை காலி செய்துவிடுவேன்' என கூறி உருட்டு கட்டையால் டேபிளை உடைத்துள்ளார்.
சத்தம் கேட்டு அங்கு வந்த உமாவுக்கும், பிரவீனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள், ஆத்துார் ஊரக போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனே பிரவீன், அங்கிருந்து வேகமாக சென்றார். ஆனால், ஊர்காவல் படை வீரர், கடையில் ரகளை செய்த., 'சிசிடிவி' வீடியோ பரவி வருகிறது. தலைமறைவான பிரவீனை, போலீசார் தேடுகின்றனர்.
இதுகுறித்து ஆத்துார் டி.எஸ்.பி., கூறுகையில், ''ஓட்டலில் பிரவீன் தகராறு செய்தது தொடர்பாக, ஊர்காவல் படை பொறுப்பாளர் மூலம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.