/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பயணியரை ஏற்ற மறுப்பு தனியார் பஸ் சிறைபிடிப்பு
/
பயணியரை ஏற்ற மறுப்பு தனியார் பஸ் சிறைபிடிப்பு
ADDED : அக் 14, 2024 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி: சேலம் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று, தனியார் பஸ்சில் வாழப்பாடி செல்ல பயணியர் ஏறினர். கண்டக்டர், பயணியரை ஏற்ற மறுத்தார்.
பஸ் கிளம்பும்போது பயணியர் ஏறினர். மாலை, 6:00 மணிக்கு வாழப்பாடி பஸ் ஸ்டாண்டுக்கு அந்த பஸ் வந்த-போது, அப்பகுதி மக்கள், தனியார் பஸ்சை நிறுத்தினர். தொடர்ந்து, வாழப்பாடி பயணியரை தொடர்ந்து ஏற்ற மறுப்ப-தாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவ-ரத்து பாதிக்கப்பட்டது. வாழப்பாடி போலீசார் பேச்சு நடத்திய பின், பஸ்சை மக்கள் விடுவித்து கலைந்து சென்றனர். இப்பிரச்-னைக்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என, வாழப்-பாடி மக்கள் வலியுறுத்தினர்.