/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.2.66 கோடியில் கட்டப்படும் சார் - பதிவாளர் அலுவலகம்
/
ரூ.2.66 கோடியில் கட்டப்படும் சார் - பதிவாளர் அலுவலகம்
ரூ.2.66 கோடியில் கட்டப்படும் சார் - பதிவாளர் அலுவலகம்
ரூ.2.66 கோடியில் கட்டப்படும் சார் - பதிவாளர் அலுவலகம்
ADDED : ஜூலை 10, 2025 01:39 AM
மேட்டூர், மேட்டூரில் சார் - பதிவாளர் அலுவலகம், 30 ஆண்டுக்கு மேலாக வாடகை கட்டடத்தில் இயங்கியது. 3 ஆண்டுக்கு முன், தொழிலாளர் நல மருத்துவமனை எதிரே, வாடகை கட்டடத்தில் இயங்கிய அலுவலகம் தற்போது கிழக்கு பிரதான சாலையோரம் உள்ளது.
இதனால் அரசு சார்பில், மேட்டூர் நீர்வளத்துறை கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே, 20 சென்ட் காலி நிலம், சார்-பதிவாளர் அலுவலகம் கட்ட தேர்வு செய்யப்பட்டது. கட்டடம், ஒயரிங், குழாய் பொருத்தும் பணிக்கு, அரசு, 2.66 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. கடந்த மாதம், 12ல் பூஜை போட்டு பணி தொடங்கப்பட்டது. தரைத்தளத்தில், 2,000 சதுரடியில் வாகன நிறுத்துமிடம், முதல் தளத்தில், சார் - பதிவாளர் அலுவலகம், 2ம் தளத்தில் பதிவேடு இடம் என, 6,000 சதுரடியில் கட்டுமானப் பணி நடக்கிறது. மின்துாக்கி வசதியும் செய்யப்படுகிறது. 2026 ஜனவரிக்குள் முடிக்க, இலக்கு நிர்ணயித்து பணி நடக்கிறது.