/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு டிச., 31 வரை மட்டும் அவகாசம்
/
பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு டிச., 31 வரை மட்டும் அவகாசம்
பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு டிச., 31 வரை மட்டும் அவகாசம்
பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு டிச., 31 வரை மட்டும் அவகாசம்
ADDED : நவ 06, 2024 01:42 AM
பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு
டிச., 31 வரை மட்டும் அவகாசம்
சேலம், நவ. 6-
சேலம் மாநகராட்சி பகுதிகளில் பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்யாமல் இருப்பவர்கள், டிச., 31க்குள் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்சிங் அறிக்கை:
பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டப்பூர்வ குடியுரிமைக்கான சான்றிதழ். பிறந்த, 21 நாட்களுக்குள் பிறப்பை பதிவு செய்ய வேண்டும். ஒரு குழந்தையின் பிறப்பு பெயர் இன்றி பதிவு செய்யப்படும். ஓராண்டுக்குள் குழந்தையின் பெற்றோர் எழுத்து வடிவில் உறுதிமொழியை, சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் அளித்து கட்டணமின்றி பெயரை பதிவு செய்து கொள்ளலாம். ஓராண்டுக்கு பின் குழந்தையின் பெயரை பதிவு செய்ய, 200 ரூபாய் தாமத கட்டணம் செலுத்த வேண்டும்.
விதிப்படி, 2000 ஜன., 1க்கு முன் பெயரின்றி பதிவு செய்யப்பட்ட பிறப்புகளுக்கு பதிவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. 2019 டிச., 31 முதல், 5 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம், டிச., 31ல் முடிகிறது. அதற்கு பின் மேலும் நீட்டிப்பு வழங்க இயலாது. இதுவரை பெயர் பதிவு செய்யாதவர்கள், உடனே மாநகராட்சி மைய அலுவலகத்தில் விண்ணப்பித்து பதிவு செய்து கொள்ளலாம். 2017 டிச., 31 வரை பதிவு செய்யப்பட்ட பிறப்புக்கான சான்றிதழ்களை, www.tnurbanepay.tn.gov.in என்ற இணைய தளத்திலும், 2018 ஜன., 1க்கு பின் பதிவு செய்யப்பட்ட பிறப்புகளுக்கான சான்றிதழை, www.crstn.org என்ற இணையதளத்திலும் பதிவு செய்து கொள்ளலாம்.