/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தலைவாசல் ஆட்டுப்பண்ணையில் 'கிடா' குட்டி பெற பதிவு அதிகரிப்பு
/
தலைவாசல் ஆட்டுப்பண்ணையில் 'கிடா' குட்டி பெற பதிவு அதிகரிப்பு
தலைவாசல் ஆட்டுப்பண்ணையில் 'கிடா' குட்டி பெற பதிவு அதிகரிப்பு
தலைவாசல் ஆட்டுப்பண்ணையில் 'கிடா' குட்டி பெற பதிவு அதிகரிப்பு
ADDED : நவ 03, 2025 02:14 AM
ஆத்துார்:சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையான, தலைவாசல், வி.கூட்ரோட்டில், 1,800 ஏக்கரில் ஆட்டுப்பண்ணை செயல்பட்டது. அதில் சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல், வி.கூட்ரோட்டில், 1,100 ஏக்கரில், 1,022 கோடி ரூபாயில், கால்நடை விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம், அ.தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்டது. மீதி, 700 ஏக்கர் நிலம், கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதியில் ஆட்டுப்பண்ணையாக செயல்பட்டு வருகிறது. அங்கு, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், 'கிடா' ஆடு குட்டிகளை பெறுவதற்காக, முன்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, ஆட்டுப்பண்ணை துணை இயக்குனர் முருகவேல் கூறியதாவது:
வி.கூட்ரோடு ஆட்டுப்பண்ணையில் தலைசேரி, சேலம் கறுப்பு, மேச்சேரி, சென்னை சிவப்பு ஆடு ரகங்கள், 1,250 உள்ளன. குட்டி ஈன்ற பின், 6 மாத குட்டிகளை, கிலோ, 300 முதல், 400 ரூபாய் வரை, விவசாயிகளுக்கு விற்கப்படுகிறது. தற்போது, 400 பேர், 'கிடா' குட்டிகள் கேட்டு பதிவு செய்துள்ளனர். ஆடு வளர்ப்போர், ஆதார் நகல் மற்றும் விண்ணப்பம் கொடுத்து பதிவு செய்தால், அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் குட்டிகளை விற்கிறோம். ஆடுகளின் உற்பத்தி அதிகரிக்க, தற்போதுள்ள 30 ஏக்கர் தீவன பரப்பு கூடுதலாக அமைக்கும் பணி நடக்கிறது. ஆடுகளுக்கு நல்ல விலை கிடைப்பதால், ஆடு வளர்ப்பு தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

