/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காணாமல் போன தொழிலாளி இறப்பு பரிசோதனையால் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

ADDED : நவ 18, 2024 03:11 AM
சேலம்: சேலம், தாதகாப்பட்டியை சேர்ந்த, தொழிலாளி முருகன், 40. இவரை காணவில்லை என, அவரது உறவினர்கள், கடந்த, 7ல் அன்னதானப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து அவரை தேடினர்.
இந்நிலையில் அவர் இறந்து விட்டதாகவும், உடலை பிரேத பரிசோதனை செய்து சேலம் அரசு மருத்துவமனையில் உள்ளதால், வந்து பெற்றுக்கொள்ளும்படி, போலீசார், அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.அதிர்ச்சி அடைந்து உறவினர்கள், மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு, 'காணவில்லை என புகார் கூறி இருந்தோம். எப்படி இறந்தார் என்ற விபரத்தை தெரியப்படுத்த வேண்டும். எங்க-ளிடம் கேட்காமல் பிரேத பரிசோதனை எப்படி செய்தீர்கள்' என, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் போராட்டம் நடத்தினர். போலீசார் பேச்சு நடத்திய நிலையில், போராட்டத்தை கைவிட்ட அவர்கள், உடலை வாங்க மறுத்து சென்றனர்.
போலீசார் கூறுகையில், 'ஓமலுாரில் சாலையில் மயங்கி கிடந்த முருகனை மீட்டு, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்-கப்பட்டது. பின் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இறந்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்-றனர்.