/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிவதாபுரம் சுரங்கப்பாதையில் வடிந்த நீர் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் நிம்மதி
/
சிவதாபுரம் சுரங்கப்பாதையில் வடிந்த நீர் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் நிம்மதி
சிவதாபுரம் சுரங்கப்பாதையில் வடிந்த நீர் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் நிம்மதி
சிவதாபுரம் சுரங்கப்பாதையில் வடிந்த நீர் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் நிம்மதி
ADDED : அக் 12, 2024 01:01 AM
சிவதாபுரம் சுரங்கப்பாதையில் வடிந்த நீர்
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் நிம்மதி
சேலம், அக். 12-
கோனேரிக்கரை பகுதியிலிருந்த கால்வாய் ஆக்கிரமிப்புகள், நேற்று முன்தினம் இரவு அகற்றப்பட்டதால், சிவதாபுரம் சுரங்கப்பாதையில் நேற்று மழைநீர் வடிந்து, போக்குவரத்து துவங்கியது.
சேலத்தில் இரு தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக, சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி, அங்கிருந்து வெளியேறிய உபரிநீர், சிவதாபுரம் பகுதியை சூழ்ந்தது. பள்ளப்பட்டி ஏரியிலிருந்து வெளியேறிய உபரிநீரும், ஆக்கிரமிப்பு காரணமாக சிவதாபுரத்தில் நுழைந்ததால், சித்தர்கோவில் மெயின் ரோட்டில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை மூழ்கியது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. வீடுகள், பள்ளி, அலுவலகங்களில் மழைநீர் தேங்கியது. மாநகராட்சி சார்பில், நேற்று முன்தினம் மோட்டார்கள் அமைத்து தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். வழக்கத்தை விட, திடீரென அதிக தண்ணீர் தேங்கியது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
இதில், பள்ளப்பட்டி ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர், கோனேரி கிழக்கு கோடி கால்வாய் வழியே திருமணிமுத்தாற்றில் கலக்காமல், ஆக்கிரமிப்பு காரணமாக, செஞ்சிக்கோட்டை கால்வாய் வழியே சிவதாபுரம் பகுதிக்கு வருவது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, ஆர்.டி.ஓ., அபிநயா தலைமையிலான அலுவலர்கள் மற்றும் போலீசார் தலைமையில், கோனேரிக்கரை ஆக்கிரமிப்புகள், நேற்று முன்தினம் இரவு அகற்றப்பட்டு, உபரிநீர் வெளியேற வழி செய்யப்பட்டது. இதையடுத்து, சிவதாபுரம் குடியிருப்பு பகுதி மற்றும் சுரங்கப்பாதை பகுதியில் இருந்த மழைநீர் வடிய தொடங்கி, நேற்று காலை முதல் போக்குவரத்து தொடங்கியது. ஆனாலும், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைநீர், வடியாமல் இருப்பதால், மோட்டார் வைத்து வெளியேற்றும் நடவடிக்கையில், மாநகராட்சி பணியாளர்கள் இறங்கியுள்ளனர்.

