/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காந்தி பெயர் நீக்கம்: காங்., ஆர்ப்பாட்டம்
/
காந்தி பெயர் நீக்கம்: காங்., ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 22, 2025 09:05 AM
சேலம்: சேலம், கோட்டை மைதானத்தில், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் தலைவர் பாஸ்கர் தலைமை வகித்து பேசியதாவது:
கடந்த, 2006ல் அப்போ-தைய மத்திய அரசு கிராமப்புற பெண்களின் வாழ்-வாதாரத்தை உயர்த்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் பெயரில்,ந 100 நாள் வேலை திட்டத்தை கொண்டு வந்தது. தற்-போதைய மத்திய அரசு, அத்திட்ட பெயரை மாற்றி, காந்தி பெயரை நீக்கிவிட்டது. இதை கண்-டித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட பொருளாளர் ராஜகணபதி, பொதுக்குழு உறுப்பினர்கள் சுரேஷ்குமார், சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.நிர்வாகிகள் வாக்குவாதம்இதனிடையே மாவட்ட தலைவர் பாஸ்கரிடம், மாநில செயலர் சரவணன், 'மாநில நிர்வாகியான எங்களை அழைப்பதே கிடையாது. மரியாதை கொடுப்பதில்லை, எந்த கட்சி நிகழ்ச்சியிலும் என் பெயர், படத்தை போடாமல் புறக்கணிக்கிறீர்கள். இதே நிலை நீடித்தால் உங்களை கண்டித்து சாலை மறியல் செய்வேன்' என்றார்.
பதிலுக்கு பாஸ்கரும், அவருடன் வாக்குவாதம் செய்தனார். அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள், இருவரையும் சமாதானப்படுத்தினர்.கண்களில் கறுப்பு துணிஆத்துார், உடையார்பாளையம் காந்தி சிலை அருகே, சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில் கண்-டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமையில் கட்சியினர், கண்களில் கறுப்பு துணியை கட்டி, ஊரக வேலை திட்டத்தின் பெயர் மாற்றத்தை கண்டித்து கோஷம் எழுப்-பினர். கவுன்சிலர் தேவேந்திரன், நகர தலைவர் முருகேசன், தலைவாசல் வட்டார தலைவர் வெங்கடேசன் பங்கேற்றனர்.

