/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை
/
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை
ADDED : செப் 13, 2024 07:12 AM
சேலம்: ஏ.ஐ.டி.யு.சி., தமிழ்நாடு மாநில நிர்வாக குழு கூட்டம், மாவட்ட செயலர்கள், சம்மேளன செயலர்கள் கூட்டம், சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் எதிரே நேற்று நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுச்செயலர் முருகன் தலைமை வகித்தார். திருப்பூர் எம்.பி., சுப்பராயன் பேசினார்.
தொடர்ந்து அரசு வேலைகளில் அவுட்சோர்சிங், ஒப்பந்தம் போன்ற முறைகளை தமிழக அரசு முழுமையாக கைவிடுதல்; அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல்; இலங்கை கடற்படை தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை காக்க, இலங்கை - இந்திய மீன்பிடி ஒப்பந்தத்தை துரிதப்படுத்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தேசிய செயலர் மூர்த்தி, மாநில தலைவர் காசிவிஸ்வநாதன், செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் பரமசிவம், சி.பி.ஐ-., மாவட்ட செயலர் மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.