/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நல வாரியத்தில் நில தரகர்களை இணைக்க கோரிக்கை
/
நல வாரியத்தில் நில தரகர்களை இணைக்க கோரிக்கை
ADDED : ஆக 26, 2024 02:46 AM
சேலம்: தமிழக நில தரகர்கள் நல சங்க மகாசபை கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். அதில் நில தரகர்களுக்கு பத்திரப்பதிவு துறை மூலம் உரிமம் வழங்குதல்; முதல்வர் வாக்குறுதிப்படி நில தரகர்களை நலவாரியத்தில் இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் பேசியதாவது:
கட்டட தொழிலாளிக்கு கூட குறைந்தபட்ச தினக்கூலி, 600 ரூபாய் கிடைக்கிறது. ஆனால் நில தரகர்களுக்கு நிரந்தர வருவாய் கிடையாது. ஒரு நிலத்தை விற்க மாதக்கணக்கில் பேசினாலும் அதில் வெற்றிபெறுவோம் என்பதில் உறுதியில்லை. அதனால் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில், நில தர-கர்களை இணைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.
அப்படி இணைத் தால் ஓய்வூதியம், கல்வி, திருமணம் போன்ற அரசின் நல உதவிகள் கிடைக்கும். இதுதொடர்பாக அமைச்-சர்கள், முதல்வரிடம் பேசி வருகிறேன். தி.மு.க., ஆட்சி முடிவ-தற்குள் நிலத்தரகர்களை நலவாரியத்தில் இணைக்க பாடுப-டுவேன். இவ்வாறு அவர் பேசினார்.
நிர்வாகிகள் மனோகரன், கணேசன், முருகேசன், பொருளாளர் வர-தராஜன், மாநில அமைப்பாளர் நமச்சிவாயம், கொள்கை பரப்பு செயலர் நடராஜன், மாநில அமைப்பாளர் சிவகணேசன், பதிவக அமைப்பாளர் பெரியசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

