/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
/
நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
ADDED : டிச 15, 2024 01:03 AM
சேலம், டிச. 15-
சேலத்தில், மா.கம்யூ., சார்பில், மாவட்ட, 24வது மாநாடு நேற்று நடந்தது. மத்திய குழு உறுப்பினர் சம்பத் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலர் சண்முகராஜா, அரசியல் ஸ்தாபன வேலை அறிக்கையை சமர்ப்பித்தார்.
அதில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்குதல்; மாவட்டத்தில் உள்ள உறைவிட பள்ளி, கல்லுாரி விடுதிகளில் அடிப்படை தேவைகள் நிறைவேற்றுதல்; சேலம் உருக்காலை தனியார் மயமாவதை கைவிடுதல்; மரவள்ளி டன்னுக்கு, 16,000 ரூபாய் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சூரமங்கலம் உழவர் சந்தையில் இருந்து புறப்பட்ட செங்கொடி ஊர்வலம், மாநாடு திடலை அடைந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.