/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கடைமடை விவசாய நிலத்திற்கு தண்ணீர் கிடைக்க கோரிக்கை
/
கடைமடை விவசாய நிலத்திற்கு தண்ணீர் கிடைக்க கோரிக்கை
கடைமடை விவசாய நிலத்திற்கு தண்ணீர் கிடைக்க கோரிக்கை
கடைமடை விவசாய நிலத்திற்கு தண்ணீர் கிடைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 13, 2025 01:56 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் கதவனையில் இருந்து, பழைய கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்கால், தென்கரை பாசன வாய்க்கால் என, நான்கு வாய்க்கால்கள் மூலம் விவசாய நிலத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில், தென்கரை பாசன வாய்க்கால் கிருஷ்ணராயபுரம், மாயனுார், லாலாப்பேட்டை, குளித்தலை, தண்ணீர்பள்ளி, ராஜேந்திரம், மருதுார் வழியாக பெட்டவாய்த்தலை தோகைகரையில் காவிரி ஆறு மற்றும் உய்யக்கொண்டான் வாய்க்கால் வழியாக தண்ணீர் பல மாவட்டத்திற்கு செல்கிறது.
இந்த தென்கரை பாசன வாய்க்காலின், கிளை வாய்க்கால் மூலம் பாசன பெறும் நிலங்களுக்கு தண்ணீர் செல்வதற்கு முன்பே, பணம் பலம் படைத்த விவசாயிகளின் பேச்சை கேட்டுக்கொண்டு, பாதி வழியில் சிறு, 'கேட்'களை பொதுப்பணித்துறை ஊழியர்கள் திறந்துவிடுகின்றனர். இதனால் கடைமடை விவசாயிகளின், நிலத்திற்கு தண்ணீர் செல்வதில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.