/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாலையில் ஓடும் கழிவுநீர் பாலம் கட்ட கோரிக்கை
/
சாலையில் ஓடும் கழிவுநீர் பாலம் கட்ட கோரிக்கை
ADDED : மே 18, 2025 05:41 AM
பனமரத்துப்பட்டி: சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில், கிழக்கு பகுதி சர்வீஸ் சாலையோரம் நிலவாரப்பட்டி ஊராட்சியில், தலைமலை கரடு அடிவாரம், இருசாயி அம்மன் கோவில் தெரு உள்ளது. அப்பகுதியில் உள்ள வீடுகள், கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சர்வீஸ் சாலையில் ஓடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் கூறுகையில், 'தனியார் மருத்துவமனை - இருசாயி அம்மன் கோவில் தெரு சந்திக்கும் இடத்தில், சர்வீஸ் சாலையோரம் நெடுஞ்சாலைத்துறையினர் சிறுபாலம் கட்ட வேண்டும். அதன் வழியே கழிவுநீரை கால்வாயில் விட வேண்டும். ஏற்கனவே உள்ள கழிவுநீர் கால்வாயை துார்வாரி ஆழப்படுத்தி சீரமைக்க வேண்டும். இதன்மூலம் சாலையில் கழிவுநீர் ஓடுவதை தவிர்க்கலாம்' என்றனர்.