/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் கால்வாய் பாசன நீர் திறப்பு ஜன., 15 வரை நீடிக்க வேண்டுகோள்
/
மேட்டூர் கால்வாய் பாசன நீர் திறப்பு ஜன., 15 வரை நீடிக்க வேண்டுகோள்
மேட்டூர் கால்வாய் பாசன நீர் திறப்பு ஜன., 15 வரை நீடிக்க வேண்டுகோள்
மேட்டூர் கால்வாய் பாசன நீர் திறப்பு ஜன., 15 வரை நீடிக்க வேண்டுகோள்
ADDED : டிச 10, 2024 07:48 AM
மேட்டூர்: மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் வரும், 13ல் பாசன நீரை நிறுத்த வேண்டிய நிலையில் ஜன.15 வரை நீர்திறப்பை நீடிக்க விவசாயிகளால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் ஆண்டு-தோறும் ஆக.1 முதல் டிச. 15 வரை, 137 நாட்கள், 9.5 டி.எம்.சி., நீர் பாசனத்துக்கு திறக்கப்படும். நீரின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு
மாவட்டங்களில், 45,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.அணையில் இருந்து கால்வாயில் அதிகபட்சம்
வினா-டிக்கு, 1,000 கனஅடி நீர் திறக்க முடியும். தற்போது மூன்று மாவட்டங்களிலும் பரவலாக பெய்த
மழையால் கால்வாயில் வினாடிக்கு, 300 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நடப்பாண்டு மேட்டூர் அணை
வேகமாக நிரம்பியதால் இரு நாட்களுக்கு முன்-னதாக ஜூலை, 30ல் கிழக்கு, மேற்கு கால்வாயில்
பாசனத்து நீர்தி-றக்கப்பட்டது. அதன் படி வரும், 13ல், 137 நாட்கள் நிறைவடை-வதால் பாசன நீர் நிறுத்த
வேண்டும். எனினும், மூன்று மாவட்-டங்களிலும் தாமதமாக நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், பாசன
நீர் திறப்பை நீடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், வரும் ஜன. 15 வரை
பாசன நீரை நீடிக்க நீர்வளத்துறை சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதை ஏற்று அரசு
பாசன நீர் திறப்பை ஜன.15 வரை நீடிக்கும் என விவசாயிகள் நம்பிக்கையுடன் உள்-ளனர்.5,793 கனஅடியாக சரிவுமேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழக-கர்நாடகா எல்லையிலுள்ள நீர்பிடிப்பு
பகுதியில் பெய்த மழையால் காவிரி நீர்வரத்து கடந்த, 4ல், 32,240 கனஅடியாக அதிகரித்தது.அதன் பின் மழை தீவிரம் குறைந்ததால் நீர்வரத்து படிப்படியாக சரிய துவங்கியது. நேற்று முன்தினம்
வினாடிக்கு, 7,691 கனஅடி-யாக இருந்த அணை நீர்வரத்து நேற்று, 5,793 கனஅடியாக சரிந்-தது. அணையில்
இருந்து வினாடிக்கு, 1,000 கனஅடி நீர் குடிநீர், பாசனத்துக்கு திறக்கப்பட்டது. நீர்வரத்து கூடுதலாக
இருந்ததால் நேற்று முன்தினம், 116.13 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 116.37 அடியாக உயர்ந்தது.

