/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கொலுசு பன்மாடி கட்டடத்துக்கு நிர்வாக குழு அமைக்க கோரிக்கை
/
கொலுசு பன்மாடி கட்டடத்துக்கு நிர்வாக குழு அமைக்க கோரிக்கை
கொலுசு பன்மாடி கட்டடத்துக்கு நிர்வாக குழு அமைக்க கோரிக்கை
கொலுசு பன்மாடி கட்டடத்துக்கு நிர்வாக குழு அமைக்க கோரிக்கை
ADDED : பிப் 03, 2025 07:17 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வெள்ளி கொலுசு தொழிற்சங்கங்கள் இணையும் விழா, சிவதாபுரத்தில் நேற்று நடந்தது. இதற்கு தமிழ்நாடு வெள்ளி தொழிலாளர் பொது நலச்சங்க தலைவர் ஜெகன் தலைமை வகித்தார்.
அதில் மாவட்டத்தில் உள்ள வெள்ளி கொலுசு தொழிற்சங்கங்கள் பேரமைப்பில் இணைந்து பணிபுரியும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது; தமிழக அரசு, வெள்ளி கொலுசு தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்தல்; சேலம் மாவட்டத்தில், 25 கோடி ரூபாய் செலவில், கொலுசு தொழிலாளர்களுக்கு பன்மாடி கட்டட பணி நடந்து முடியும் நிலையில் உள்ளதால், அந்த வளாகத்துக்கு நிர்வாக குழு அமைக்க வேண்டும் என்பன உள்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சேலம் நகர அனைத்து வணிகர் சங்க பொதுச்செயலர் ஜெயசீலன், சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர் கைவினை வளர்ச்சி சங்கத்தலைவர் ஆனந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.