/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆவின் பால் கமிஷன் தொகை உயர்த்தி வழங்க கோரிக்கை
/
ஆவின் பால் கமிஷன் தொகை உயர்த்தி வழங்க கோரிக்கை
ADDED : டிச 18, 2024 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், டிச. 18-
சேலம் ஆவின் அலுவலகத்தில், ஆவின் நிர்வாகம் - முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதில் ஆவின் பால் முகவர் சங்கம் சார்பில் தலைவர் அருணாசுந்தர் அளித்த மனு:
முகவர் சங்கம் சார்பில், ஆவின் பால் கமிஷன் உயர்வு குறித்து பலமுறை விண்ணப்பித்தும், 2018 முதல், 2024 வரை உயர்த்தப்படவில்லை. உடனே, 5 சதவீத கமிஷன் தொகையை, 8 சதவீதமாக உயர்த்த வேண்டும். முகவர் உரிமங்களை புதுப்பித்து வழங்கினால், முகவர்கள், வங்கிகளில் கடன் பெற வாய்ப்பு ஏற்படும். 'ஆக்சிஸ்' வங்கி கிளைகளில், முகவர்களிடம் பால் பணம் பெறுவதற்கு அலைக்கழிக்கின்றனர். இதையும் சரிசெய்ய வேண்டும்.