/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வனப்பகுதியில் வசிப்போருக்கு பட்டா வழங்க கோரிக்கை
/
வனப்பகுதியில் வசிப்போருக்கு பட்டா வழங்க கோரிக்கை
ADDED : டிச 29, 2025 09:55 AM
பனமரத்துப்பட்டி: தமிழ்நாடு ெஷட்யூல்டு டிரைப்(மலையாளி) பேரவையின், சேலம் தெற்கு வட்டார ஆலோசனை கூட்டம், தும்பல்பட்டியில் நேற்று நடந்தது. வட்டார தலைவர் செல்லன் தலைமை வகித்தார். செயலர் தங்கவேல், பொருளாளர் ஹரிகரசுதன் உள்ளிட்டோர் பேசினர்.
அதில், 2006 வன உரிமை சட்டப்படி, வனப்பகுதியில் வாழும் மக்களுக்கு பட்டா வழங்குதல்; ஜல்லுாத்துப்பட்டி முதல் கவுண்டாபுரம் வரை உள்ள நடைபாதையில் சாலை அமைக்க நடவடிக்கை எடுத்தல்; வனப்பகுதியில் உற்பத்தியாகும் புளி, நாவல், தேன் உள்ளிட்ட சிறுவன மகசூல் பொருட்களை, நாங்கள் எடுத்துகொள்வதற்கு சமுதாய பட்டா வழங்குதல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வன உரிமைக்குழு நிர்வாகிகள், தும்பல்பட்டி, கம்மாளப்பட்டி, குரால்நத்தம் மக்கள் பங்கேற்றனர்.

