/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆத்துார் வனக்கோட்டத்தில் பறவை கணக்கெடுப்பு
/
ஆத்துார் வனக்கோட்டத்தில் பறவை கணக்கெடுப்பு
ADDED : டிச 29, 2025 09:55 AM
ஆத்துார்: ஆத்துார் வனக்கோட்டத்தில் நீர்வாழ் பறவை கணக்கெடுப்பு பணி நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து நேற்றும் நடந்தது.
ஆத்துார், கெங்கவல்லி, தம்மம்பட்டி, தும்பல், கல்வராயன்மலை உள்ளிட்ட வனச்சரக பகுதிகளில் ஏரி உள்ளிட்ட நீர்நிலை பகுதிகள் என, 25 இடங்களில் கணக்கெடுப்பு நடந்தது. வனத்துறையினருடன், இயற்கை ஆர்வலர், பேராசிரியர், கல்லுாரி மாணவ, மாணவியர் என, 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வனத்துறை அலுவலர்கள் கூறுகையில், 'நீர் நிலைகளில் வாழும் பறவைகளின் எண்ணிக்கை, பரவல் குறித்து, தரவு சேகரித்து, அவற்றை பாதுகாக்கும் முயற்சியாக, இரு நாட்களாக கணக்கெடுப்பு நடக்கிறது.
நீர்வாழ் பறவைகள், பதிவு செய்யப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு விபரம், முதன்மை தலைமை வன பாதுகாவலர் மூலம் வெளியிடப்படும்' என்றனர்.

