/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாளை அதிகாலை 5 மணிக்கு 'பரமபத வாசல்' திறப்பு நிகழ்ச்சி
/
நாளை அதிகாலை 5 மணிக்கு 'பரமபத வாசல்' திறப்பு நிகழ்ச்சி
நாளை அதிகாலை 5 மணிக்கு 'பரமபத வாசல்' திறப்பு நிகழ்ச்சி
நாளை அதிகாலை 5 மணிக்கு 'பரமபத வாசல்' திறப்பு நிகழ்ச்சி
ADDED : டிச 29, 2025 09:55 AM
சேலம்: சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களில், கடந்த, 19ல், திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்கியது. 20 முதல், பகல் பத்து உற்சவம் தொடங்கி நடக்கிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியான, 'பரமபத வாசல்', நாளை காலை, 5:00 மணிக்கு திறக்கப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள், அறங்காவலர்கள், பட்டாச்சாரியார்கள் செய்து வருகின்றனர்.
அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், பகல் பத்து உற்சவத்தின், 10ம் நாளான இன்று மாலை, சவுந்தரராஜர் நாச்சியார் திருக்கோலத்தில், 'மோகினி' அலங்காரத்தில் வீதி உலா வருகிறார். நாளை அதிகாலை, 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். பட்டைக்கோவில் வரதராஜர், செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர், வெங்கடாஜலபதி உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும், நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது.காடையாம்பட்டி தாலுகா சின்னதிருப்பதியில் உள்ள வெங்கட்ரமணசுவாமி கோவிலில் நாளை அதிகாலை, 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடக்க உள்ளது. அதற்காக நேற்று சொர்க்கவாசல் வழியை அலங்காரம் செய்யும் பணி நடந்தது.

