/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை உபரிநீர் திறக்கும் முன் எண்ணெய் கழிவை அகற்ற கோரிக்கை
/
மேட்டூர் அணை உபரிநீர் திறக்கும் முன் எண்ணெய் கழிவை அகற்ற கோரிக்கை
மேட்டூர் அணை உபரிநீர் திறக்கும் முன் எண்ணெய் கழிவை அகற்ற கோரிக்கை
மேட்டூர் அணை உபரிநீர் திறக்கும் முன் எண்ணெய் கழிவை அகற்ற கோரிக்கை
ADDED : டிச 25, 2024 07:40 AM
மேட்டூர்: மேட்டூர் அணையில் உபரிநீர் திறக்கும் முன், தேங்கிய எண்ணெய் கழிவை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேட்டூர் அனல்மின் நிலைய கொதிகலனை குளிர்விக்க செல்லும் தண்ணீர், பின் கால்வாய் வழியே, மேட்டூர் அணை உபரிநீர் செல்லும் காவிரியாற்றுக்கு செல்லும். கடந்த, 19ல், மேட்டூர், 840 மெகாவாட் அனல்மின் நிலையத்தில் நடந்த விபத்தில், ஒப்பந்த ஊழியர்கள், 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயம் அடைந்தனர். அந்த விபத்தின்போது நிலக்கரி துகள், ஆயில், நீரில் கலந்து, கால்வாய் வழியே, அணை உபரிநீர் செல்லும் காவிரி கரையோரம் ஆங்காங்கே தேங்கியுள்ளது.
தற்போது கதவணை மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யாததால் தண்ணீர் உபரிநீர் செல்லும் பகுதியில் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது. இது நேற்று முன்தினம் அனல்மின் நிலைய நிர்வாகத்தின் கவனத்துக்கு சென்றது. இரு நாட்களாக, கரையோர நீரில் தேங்கியுள்ள ஆயில் கழிவை அகற்றும் பணியில், அனல்மின் நிலைய நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. நேற்று கழிவுநீரை உறிஞ்சி, 4,000 லிட்டர் கொள்ளளவு டேங்கர் லாரியில், 4 முறை ஏற்றி எடுத்து செல்லப்பட்டது.
தேங்கிய எண்ணெய் படலத்தால் பெரிய பாதிப்பு இல்லை. இருப்பினும் மேட்டூர் அணை விரைவில் நிரம்பும் நிலையில் உள்ளதால், 16 கண் மதகில் உபரிநீர் வெளியேற்ற வாய்ப்புள்ளது. அப்போது கழிவுநீரை தண்ணீர் அடித்துச்செல்லும். இதன்மூலம் காவிரி கரையோரம் உள்ள நீருந்து நிலையங்களில், எண்ணெய் படலத்துடன் கூடிய தண்ணீர் செல்ல வாய்ப்பு ஏற்படும். அதனால் உபரிநீர் திறக்கும் முன், எண்ணெய் படலத்தை அகற்ற, மக்கள் வலியுறுத்தினர்.