/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அமைச்சரவையில் இருந்துபொன்முடியை நீக்க கோரிக்கை
/
அமைச்சரவையில் இருந்துபொன்முடியை நீக்க கோரிக்கை
ADDED : ஏப் 17, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:இந்து மக்கள் கட்சி, சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமையில் நிர்வாகிகள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:
தி.மு.க.,வை சேர்ந்த, அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவம், அதன் அடையாளமாக திகழும் திருநீறு, திருநாமத்தை கொச்சைப்படுத்தி, ஒட்டுமொத்த இந்து சமயத்தை அவமானப்படுத்தும்படி உள்நோக்கத்துடன் பேசியுள்ளார். பொன்முடியின் கட்சி பதவி மட்டும் பறிக்கப்பட்டுள்ளது. அவரை, அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும். எம்.எல்.ஏ., பதவியும் பறிக்கப்பட வேண்டும். மேலும் சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.