/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புது பஸ் ஸ்டாண்டில் இருந்து ப.பட்டிக்கு பஸ் இயக்க கோரிக்கை
/
புது பஸ் ஸ்டாண்டில் இருந்து ப.பட்டிக்கு பஸ் இயக்க கோரிக்கை
புது பஸ் ஸ்டாண்டில் இருந்து ப.பட்டிக்கு பஸ் இயக்க கோரிக்கை
புது பஸ் ஸ்டாண்டில் இருந்து ப.பட்டிக்கு பஸ் இயக்க கோரிக்கை
ADDED : டிச 10, 2025 09:46 AM
பனமரத்துப்பட்டி: சேலம், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 15 கி.மீ.,ல் உள்ள பனமரத்துப்பட்டி வழியே, 10க்கும் மேற்பட்ட அரசு, தனியார் டவுன் பஸ்கள் இயக்-கப்படுகின்றன.
ஆனால் பனமரத்துப்பட்டியில் இருந்து, 20 கி.மீ.,ல் உள்ள சேலம் புது பஸ் ஸ்டாண்டுக்கு, பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பனமரத்துப்பட்டி மக்கள், இரு டவுன் பஸ்களில் ஏறி இறங்கி, புது பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டியுள்ளது. இதனால் நேர விரயம், கூடுதல் பஸ் கட்டணம் ஏற்படுகிறது.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது: பனமரத்துப்-பட்டியில் இருந்து தினமும் ஏராளமானோர், கொண்டலாம்பட்டி, புது பஸ் ஸ்டாண்ட், 5 ரோடு பகுதிகளுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். அதனால் சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, திருவாக்கவுண்டனுார், 5 ரோடு வழியே புது பஸ் ஸ்டாண்டுக்கு, டவுன் பஸ்களை இயக்க வேண்டும். இதுகுறித்து, அ.தி.மு.க.,வை சேர்ந்த, வீரபாண்டி தொகுதி, எம்.எல்.ஏ., ராஜமுத்துவி-டமும் கோரிக்கை வைத்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
எம்.எல்.ஏ., ராஜமுத்து கூறுகையில், ''புது பஸ் ஸ்டாண்டில் இருந்து பனமரத்துப்பட்டிக்கு டவுன் பஸ் இயக்க, போக்குவரத்துக்கழக அதிகாரிக-ளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

