ADDED : பிப் 17, 2024 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி : பனமரத்துப்பட்டி, திப்பம்பட்டி ஊராட்சி, 5வது வார்டில் பொது கழிப்பிடம் உள்ளது.
அதை காமராஜர் காலனி, விநாயகர் காலனி, அருந்ததியர் காலனி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இதுகுறித்து மக்கள் கூறுகையில், '200 குடும்பத்தினர் பொது கழிப்பிடத்தை பயன்படுத்துகிறோம். செப்டிக் டேங்க் சிறிதாக உள்ளதால், 15 நாட்களில் நிரம்பி விடுகிறது. அதில் இருந்து வெளியேறும் கழிவு, குளம் போல் தேங்குகிறது. இயற்கை உபாதை கழிக்க, திறந்த வெளிக்கு செல்கின்றனர். நவீன சுகாதார வளாகம் கட்ட, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.