/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெண் விவகாரத்தில் சிக்கிய மேலாளரிடம் ரூ.9 லட்சம் பறித்த 2 பேருக்கு 'காப்பு'
/
பெண் விவகாரத்தில் சிக்கிய மேலாளரிடம் ரூ.9 லட்சம் பறித்த 2 பேருக்கு 'காப்பு'
பெண் விவகாரத்தில் சிக்கிய மேலாளரிடம் ரூ.9 லட்சம் பறித்த 2 பேருக்கு 'காப்பு'
பெண் விவகாரத்தில் சிக்கிய மேலாளரிடம் ரூ.9 லட்சம் பறித்த 2 பேருக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 27, 2025 01:43 AM
சேலம் பெண்ணுடன் நெருக்கமாக இருந்த படத்தை காட்டி, தனியார் வங்கி இன்சூரன்ஸ் கிளை மேலாளரை மிரட்டி, 9 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில், 2 பேரை, அழகாபுரம் போலீசார் கைது
செய்தனர்.இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது: சேலம், அழகாபுரம், படையப்பா நகரை சேர்ந்தவர் சசி சேகர், 41. தர்மபுரியில் உள்ள தனியார் வங்கியில், இன்சூரன்ஸ் கிளை மேலாளராக உள்ளார். ஓராண்டுக்கு முன், சேலம் கிளையில் பணியாற்றியபோது, சக பெண் பணியாளருடன் நட்பு ஏற்பட்டு, நெருக்கமாக பழகி வந்தார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கும், சேலம், பச்சப்பட்டியை சேர்ந்த, மருந்து விற்பனை பிரதிநிதிக்கும், கடந்த ஜனவரியில் திருமணமானது. பின் அப்பெண், சசிசேகருடன் பேசுவதை தவிர்த்துவிட்டார்.
அதேநேரம் திருமணமான சில வாரத்தில் அப்பெண் வாந்தி எடுத் தார். அதனால் உண்மையை மறைக்க விரும்பாத அவர், சசிசேகருடன் பழகியதை, கணவரிடம் தெரிவித்துள்ளார்.இதனால் கடந்த ஏப்., 2ல், சசிசிசேகரை சந்தித்து பேசிய மருந்து விற்பனை பிரதிநிதி, 'உன்னால் என் மனைவி, 2 மாத கர்ப்பமாக உள்ளார். கருவை கலைக்க, ஒரு லட்சம் ரூபாய் தேவை' என கேட்டு, 80,000 ரூபாய் பெற்றுக்கொண்டார். இதையறிந்து, மருந்து விற்பனை பிரதிநிதியின் நண்பரான, அழகாபுரம், பெரியான்வட்டத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 34, சசிசேகரிடம் பணம் பறிக்க திட்டமிட்டார். அதற்கு அவரது கூட்டாளிகள், 3 பேருடன் சென்று,
சசிசேகரை சந்தித்து அவரிடம், 9 லட்சம் ரூபாயை மிரட்டி பறித்துக்கொண்டனர்.
தொடர்ந்து அப்பெண்ணுடன் சசிசேகர் நெருக்கமாக இருக்கும் படத்தை காட்டி, அதை வெளியிடாமல் இருக்க, மேலும், 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினர். இதனால் சசிசேகர், கடந்த, 25ல் அளித்த புகார்படி, 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தோம். இன்று(நேற்று), கோபால கிருஷ்ணன், அவரது கூட்டாளியான, சேலம், பாண்டியராஜன் தெருவை சேர்ந்த, ரவுடி மோகன்ராஜ், 37, ஆகியோரை கைது செய்தோம். இவர்கள் வாக்குமூலப்படி, உலகநாதன், பூமலைராஜனை தேடுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.