/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புகையிலை கடத்திய 3 பேருக்கு 'காப்பு'
/
புகையிலை கடத்திய 3 பேருக்கு 'காப்பு'
ADDED : நவ 10, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புகையிலை கடத்திய
3 பேருக்கு 'காப்பு'
ஆத்துார், நவ. 10-
ஆத்துார், புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் காரில் புகையிலை பொருட்கள் கடத்துவதாக, நேற்று ஆத்துார் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீசார் ஆய்வு செய்தபோது, ஆம்னி வேனில், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிந்தது. 20,000 ரூபாய் மதிப்பில், 40 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் ஆம்னி வேன், 'ஸ்பிளண்டர்' பைக்குகள் இரண்டை பறிமுதல் செய்தனர்.
மேலும் கடத்தலில் ஈடுபட்ட ஆத்துார் கோவர்த்தனன், 50, கல்லாநத்தம் யோக
பிரகாஷ், 24, தென்னங்குடிபாளையம்
ரத்தினகுமார், 47, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.