/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
8 மாதமாக தலைமறைவாக இருந்தவருக்கு 'காப்பு
/
8 மாதமாக தலைமறைவாக இருந்தவருக்கு 'காப்பு
ADDED : ஆக 05, 2025 01:04 AM
ஆத்துார், கொலை வழக்கில் எட்டு மாதமாக தலைமறைவாக இருந்த நபரை, போலீசார் கைது செய்து, ஆத்துார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஆத்துார் அடுத்த, ஏத்தாப்பூர் பகுதியில் கடந்த, 2004ல், நடந்த கொலை வழக்கு, ஆத்துார் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய, தர்புமரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, அலமேலுபுரத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜேந்திரன், 48, என்பவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.
கடந்த, 2024, நவ., 22ல், வழக்கை விசாரித்த ஆத்துார் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம், ராஜேந்திரனுக்கு, பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. எட்டு மாதமாக தலைமறைவாக இருந்த, ராஜேந்திரனை பாப்பிரெட்டிப்பட்டியில் கைது செய்த போலீசார், நேற்று ஆத்துார் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.