/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பைக்கை திருடி ஓட்டி வந்தவருக்கு 'காப்பு'
/
பைக்கை திருடி ஓட்டி வந்தவருக்கு 'காப்பு'
ADDED : மே 30, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் சேலம், அன்னதானப்பட்டி போலீசார், அதே பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
அப்போது யமஹா பைக்கில் வந்தவரை நிறுத்தி விசாரித்தபோது, அவர் ஓட்டி வந்தது, திருடப்பட்ட வாகனம் என தெரிந்தது.
மேலும் விசாரணையில், அஸ்தம்பட்டி, ஜான்சன்பேட்டை, அன்பு நகரை சேர்ந்த அல்வின்ராஜ், 19, என்பதும், அன்னதானப்பட்டி, பள்ளப்பட்டி, செவ்வாய்பேட்டை உள்ளிட்ட இடங்களில் விலை உயர்ந்த பைக்குகளை திருடியவர் என்பதும் தெரிந்தது. அதில் ஒரு பைக்கை, அவரது காதலி வீடு முன் நிறுத்தி வைத்திருந்ததும் தெரிந்தது. இதனால் அல்வின்ராஜை கைது செய்த போலீசார், அப்பாச்சி, யமஹா ஆர்.எக்ஸ்., 100 பைக்குகள், டியோ மொபட்டை மீட்டனர்.