தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பீர் பாட்டிலால் தாக்கியவருக்கு காப்பு

பீர் பாட்டிலால் தாக்கியவருக்கு காப்பு

பீர் பாட்டிலால் தாக்கியவருக்கு காப்பு


ADDED : பிப் 02, 2026 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 06:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்; சேலம் நஞ்சம்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன், 25. அதே பகுதியில் உள்ள பள்ளி மைதானத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழி-யாக வந்த வாலிபர், மது போதையில் முனியப்ப-னிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர், திடீரென அருகில் இருந்த பீர்பாட்டிலை எடுத்த வாலிபர், முனியப்பனை சரமாரியாக தாக்கினார். இந்த தாக்குதலில் முனியப்பனுக்கு ரத்தம் கொட்டியது, கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் முனியப்-பனை மீட்டு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.இது குறித்து முனியப்பன் கொடுத்த புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி, அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன், 25, என்பவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us