/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாலிபரை பாட்டிலால் தாக்கியவருக்கு 'காப்பு'
/
வாலிபரை பாட்டிலால் தாக்கியவருக்கு 'காப்பு'
ADDED : ஆக 14, 2025 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், செவ்வாய்ப்பேட்டை நரசிம்ம செட்டி சாலையை சேர்ந்தவர் சுனில்குமார், 26. நேற்று முன்தினம் அன்னதானப்பட்டி, மூலப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே அமர்ந்திருந்தார்.
அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பாபு, 35 என்பவர், சுனில்குமாரிடம் மது அருந்த பணம் கேட்டார். சுனில்குமார் இல்லை என கூறியதால், தகாத வார்த்தையில் திட்டிய பாபு, தொடர்ந்து பீர் பாட்டிலால், சுனில்குமாரின் தலையில் தாக்கினார். படுகாயம் அடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார், பாபுவை நேற்று கைது செய்தனர்.

