/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
2 மாதங்களுக்கு பின் சிக்கிய ரவுடிக்கு 'காப்பு'
/
2 மாதங்களுக்கு பின் சிக்கிய ரவுடிக்கு 'காப்பு'
ADDED : ஆக 01, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், கிச்சிப்பாளையம், முருக கவுண்டர் காட்டை சேர்ந்தவர் கரண், 23. கடந்த, 4ல் கிச்சிப்பாளையம், சுண்ணாம்பு சூளையில் நடந்து சென்றபோது முன்விரோதத்தில், அதே பகுதியை சேர்ந்த ரவுடி ராஜா, 23, உள்பட, 9 பேர், கரண், அவரது சகோதரர் விகனேைஷ கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து கரண் புகார்படி கிச்சிப்பாளையம் போலீசார், 8 பேரை கைது செய்து, ரவுடி ராஜாவை, 2 மாதங்களாக தேடி வந்தனர். நேற்று, வீடு அருகே இருந்த அவரை, போலீசார் கைது செய்தனர்.