/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அழுகிய நிலையில் கணவன், மனைவி சடலமாக மீட்பு
/
அழுகிய நிலையில் கணவன், மனைவி சடலமாக மீட்பு
ADDED : மே 09, 2024 11:53 AM
சேலம்: சேலம் அருகே ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் மனைவியுடன் சடலமாக இறந்து கிடந்தார்.
சேலம் அருகே உள்ளது இரும்பாலை . இங்குள்ள ஓம் சக்தி நகர் பகுதியில் வசித்து வந்தவர் நாச்சிமுத்து வயது 75). இவர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜெகதாம்பாள் (வயது 65) என்பருடன் தனியே வசித்து வந்தார் .இன்று அதிகாலை நாச்சிமுத்து வீட்டிலிருந்து துர்நாற்றம் அடித்தது.
இதை அறிந்த பொதுமக்கள் உடனே இரும்பாலை காவல் நிலைய போலீசருக்கு தகவல் தெரிவித்தனர் . இதனையடுத்து போலீசார் விரைந்து சென்று பார்த்த போது நாச்சிமுத்து, அவரது மனைவி ஜெகதாம்பாள் ஆகியோர் அழுகிய நிலையில் இறந்த கிடந்தனர். கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிகிறது . இதுகுறித்து இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.