/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அழுகிய நிலையில் முதியவர் சடலம் மீட்பு
/
அழுகிய நிலையில் முதியவர் சடலம் மீட்பு
ADDED : நவ 14, 2024 07:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்:: விமான நிலையம் அருகே முதியவர் சடலம் மீட்கப்பட்டது.ஓமலுார் அருகே, சேலம் விமான நிலையம், 'ரன்-வே' சுற்றுச்சுவர் உள்ள குப்பூரில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது. நேற்று மாலை அங்கு சென்ற ஓமலுர் போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர்.
அதில் இறந்தவர், மேச்சேரி அருகே புக்கம்பட்டியைச் சேர்ந்த ராஜப்பன், 88, என தெரிந்தது. கடந்த அக்., 23 முதல், அவரை காணவில்லை என, மேச்சேரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர்
என, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

