/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சரபங்கா ஆற்றில் மூதாட்டி சடலம் மீட்பு
/
சரபங்கா ஆற்றில் மூதாட்டி சடலம் மீட்பு
ADDED : டிச 09, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: தேவூர் அருகே சென்றாயனுாரை சேர்ந்தவர் ஆராயி, 73. இவரது கணவர் இறந்துவிட்டார். ஆராயி நேற்று முன்தினம் மதியம், 3:00 மணிக்கு, அரசிராமணியில் உள்ள விவசாய நிலத்துக்கு போக, அங்குள்ள சரபங்கா ஆற்றின் தரைவழி பாதை வழியே சென்றார்.
அப்போது வழுக்கி, ஆற்றில் விழுந்ததில், தண்ணீர் இழுத்துச்சென்றுள்ளது. இதனால் அவரை, தீயணைப்பு துறையினர் தேடினர். ஆனால் இரவு ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. 2ம் நாளான நேற்று, இடைப்பாடி தீயணைப்பு துறையினர், மீன்பிடிக்கும் தொழிலாளர்கள் உதவியுடன், மூதாட்டியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கு பின், ஆராயி சடலத்தை மீட்டனர். தேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.