/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'போதை'யால் பறிபோன உயிர் கிணற்றில் சடலம் மீட்பு
/
'போதை'யால் பறிபோன உயிர் கிணற்றில் சடலம் மீட்பு
ADDED : செப் 22, 2024 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: மல்லுார் அருகே கல்லியன்வலசை சேர்ந்தவர் சீனிவாசன், 34. மல்லுாரில் உள்ள ஓட்டலில் வேலை செய்தார்.
நேற்று காலை வீடு அருகே உள்ள கிணற்றில் அவரது சடலம் மிதந்தது. செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு வீரர்கள், சடலத்தை மீட்டனர். இதுகுறித்து மல்லுார் போலீசார் கூறுகையில், ''சீனிவாசனுக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனர். மது பழக்கத்தை கைவிடாததால் மனைவி பிரிந்து சென்றார். அப்போதும் திருந்தாத அவர், போதையாலேயே கிணற்றில் தவறி விழுந்து இறந்துள்ளார்,'' என்றார்.