குடிநீர் கேட்டு அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் போராட்டம்
குடிநீர் கேட்டு அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் போராட்டம்
ADDED : செப் 30, 2026 05:59 AM

சேலம்; நகர்புற வாழ்வியல் மேம்பாடு திட்டத்தில், கடந்த ஆட்சியில் சேலம், நரசோதிப்பட்டி, மீனாட்சி நகரில், 330 வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடி-யிருப்பு கட்டப்பட்டது.
அதில், 120 பேருக்கு வீடு ஒதுக்கீடு செய்து, அதற்-கான ஆணை கடந்த பிப்ரவரியில் வழங்கப்பட்-டது. அவர்கள் பயன்பாடுக்கு, ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், 4 மாதங்-களாக அதில் தண்ணீர் எடுக்க முடியாத சூழல் உள்ளது. மாநகராட்சி நிர்வாகமும் குடிநீர் வசதி செய்து கொடுக்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகள், அர-சியல்வாதிகளிடம் புகார் தெரிவித்தும் நடவ-டிக்கை இல்லை.
தற்போது அங்கு வசிக்கும் குடும்பத்தினர், நேற்று குடியிருப்பு முன் காலிக்குடங்களுடன் சிறிது நேரம் போரட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்-றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
வீடு வழங்கிய நிலையில் முறையான குடிநீர் வசதி இல்லாததால், பல பேர் குடியேறாமல் உள்-ளனர். இங்குள்ள காலி வீடுகளில், இரவில் இளைஞர்கள் மது அருந்தி, சட்ட விரோத செயல்-களில் ஈடுபடுவதால், பெண்கள் வெளியே வர முடியாத சூழல் உள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இனியா-வது அதிகாரிகள், நடவடிக்கை எடுத்து குடிநீர் வசதி, பாதுகாப்பு ஆகியவற்றை ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
