ADDED : செப் 29, 2026 06:24 AM

கெங்கவல்லி; தம்மம்பட்டி அருகே உலிபுரத்தை சேர்ந்த விவ-சாயி சரவணன், 50. இவருக்கும், அவரது நிலத்தை ஒட்டி உள்ள தனியார் பள்ளி நிர்வாகத்-துக்கும் இடையே, பாதை தொடர்பாக பிரச்னை உள்ளது. அந்த நிலத்தை அளவீடு செய்து கொடுக்கும்படி, தனியார் பள்ளி சார்பில், ஆத்துார் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
நிலத்தை அளவீடு செய்து தரும்படி, வருவாய்த்-துறை மற்றும் போலீசாருக்கு, நீதிமன்றம் உத்தர-விட்டது. தொடர்ந்து கெங்கவல்லி தாலுகா அலு-வலகத்தில் நில அளவையராக பணிபுரியும் வேலுார் மாவட்டம் நெமிலியை சேர்ந்த வசந்த-குமார், 34, அங்கு நேற்று நில அளவீடு செய்தார். அவரது மொபைல் போனுக்கு தொடர்பு கொண்ட சரவணன், 'பள்ளிக்கு ஆதரவாக நிலத்தை அள-வீடு செய்து கொடுத்துள்ளரீர்கள்' எனக்கூறி தகாத வார்த்தைகளில் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வசந்தகுமார் புகார்-படி, தம்மம்பட்டி போலீசார்
விசாரித்து, சரவணனை கைது செய்தனர்.
