/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'சீமானுக்கு ரெட்டை நாக்கு' விலகிய நிர்வாகி குற்றச்சாட்டு
/
'சீமானுக்கு ரெட்டை நாக்கு' விலகிய நிர்வாகி குற்றச்சாட்டு
'சீமானுக்கு ரெட்டை நாக்கு' விலகிய நிர்வாகி குற்றச்சாட்டு
'சீமானுக்கு ரெட்டை நாக்கு' விலகிய நிர்வாகி குற்றச்சாட்டு
ADDED : ஜன 13, 2025 03:21 AM
சேலம்: நா.த.க., சேலம் மாநகர் மாவட்ட கொள்கை பரப்பு செயலர் அழ-கரசன், வணிகர் பாசறை இணை செயலர் வசந்தகுமார், சேலம் மேற்கு தொகுதி பொறுப்பாளர் பாஸ்கரன், ஓமலுார் தெற்கு ஒன்-றிய பொறுப்பாளர் ஸ்டாலின் ஆகியோர், கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக, சமூக வலை
தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இதுகுறித்து அழகரசன் கூறியதாவது: சீமானுக்கு ரெட்டை நாக்கு என்பதால், முரண்பாடாகவும்,
சர்ச்சைக்குரிய கருத்துகளையும் பேசி வருகிறார். எங்களால் தொடர்ந்து முட்டுக்கொடுக்க முடியவில்லை. த.வெ.க., தலைவர் விஜயை தம்பி என்றார். மறுநாள் அவரை விமர்சனம் செய்கிறார். பணம் வைத்திருக்கும் நிர்வாகிகளிடம் நெருக்கமாக பழகுகிறார். பல ஆண்டுகளாக கட்சியில் உள்ள பழைய நிர்வாகிகளை கண்டு-கொள்வதில்லை. அந்த அதிருப்தியால் கட்சியில் இருந்து வெளி-யேறிவிட்டோம். எங்களுடன் கட்சியில் இருந்து, 100 பேர் விலகி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.