/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காதலுக்கு எதிர்ப்பு; பட்டதாரி தற்கொலை
/
காதலுக்கு எதிர்ப்பு; பட்டதாரி தற்கொலை
ADDED : டிச 09, 2024 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி: வாழப்பாடி, அனுப்பூரை சேர்ந்த, பழனியம்மாள் மகள் பரமேஸ்வரி, 24. பி.ஏ., பட்டதாரியான இவர், சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, அத்தனுார்பட்டியில் உள்ள அவரது உறவினர் வீட்டில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வாழப்பாடி போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'பரமேஸ்வரிக்கு திருமணம் செய்து வைக்க, அவரது பெற்றோர் மாப்பிள்ளை தேடினர். அதற்கு அவர், ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார். இருப்பினும் பெற்றோர் மாப்பிள்ளை தேடி வந்ததால், பரமேஸ்வரி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்றனர்.