/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காலனி பெயர்களை மாற்ற சிறப்பு கூட்டத்தில் தீர்மானம்
/
காலனி பெயர்களை மாற்ற சிறப்பு கூட்டத்தில் தீர்மானம்
காலனி பெயர்களை மாற்ற சிறப்பு கூட்டத்தில் தீர்மானம்
காலனி பெயர்களை மாற்ற சிறப்பு கூட்டத்தில் தீர்மானம்
ADDED : அக் 30, 2025 02:27 AM
ஆத்துார், ஆத்துார் நகராட்சி, 26வது வார்டு பாலாஜி நகரில், சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. காங்., கவுன்சிலர் தேவேந்திரன் தலைமை வகித்து பேசியதாவது:
காலனி பெயரை அகற்ற, தமிழக அரசு அறிவித்துள்ளதால், இந்த வார்டில் காலனி என குறிப்பிட்டுள்ள இடங்களில், அயோத்திதாசர், மீனாட்சியம்மாள் சிவராஜ், திருவள்ளுவர், காமராஜர், அவ்வையார், அகத்தியர், புத்தர் நகர் என்ற பெயர்கள் வைக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த மகாமில், ஓட்டு திருட்டை தடுக்க வேண்டும். வார்டு பகுதிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். இவற்றையும் தீர்மானமாக சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து காலனி பெயர் மாற்றம் உள்பட, 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதேபோல் ஆத்துார் நகராட்சியில் உள்ள, 33 வார்டுகளிலும், கூட்டம் நடத்தப்பட்டு, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தி.மு.க.,வை சேர்ந்த, நகராட்சி தலைவி நிர்மலாபபிதா, கமிஷனர் சையது முஸ்தபாகமால், கவுன்சிலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

