ஓய்வு போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் தொடக்கம்
ஓய்வு போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் தொடக்கம்
ADDED : அக் 14, 2026 05:17 AM
சேலம்:தமிழ்நாடு
அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற ஊழியர் நலச்சங்கம் சார்பில்,
சேலம், புது பஸ் ஸ்டாண்ட் அருகே, மெய்யனுார் அரசு போக்குவரத்து
பணிமனை முன், 3 நாட்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று
தொடங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க
மாவட்ட தலைவர் அருள்மொழி தொடங்கிவைத்தார்.
நலச்சங்க மாவட்ட தலைவர்
தங்கவேல் பேசுகையில், ''2026 ஏப்., 1க்கு பின் ஓய்வு
பெற்றவர்களுக்கு, ஓய்வு கால பணப்பலன் உடனே வழங்க வேண்டும். 2003 ஏப்.,
1க்கு பின் பணியில் சேர்ந்தவர்களை, பழைய ஓய்வூதிய திட்டத்தில்
இணைத்து, 10,000 ரூபாய் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்குதல் என்பன
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்., 15 வரை, தொடர்
காத்திருப்பு போராட்டத்தை நடத்துகிறோம்,'' என்றார்.
மாவட்ட
செயலர் கலைச்செல்வன், சி.ஐ.டி.யு., மாநில துணை தலைவர் தியாகராஜன்
உள்ளிட்ட நிர்வாகிகள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.
