/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு வருவாய்த்துறை விசாரணை
/
பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு வருவாய்த்துறை விசாரணை
ADDED : டிச 18, 2025 05:00 AM
வாழப்பாடி: சேலத்தை சேர்ந்தவர் லோகநாதன், 48. இவருக்கு வாழப்பாடி அருகே, முத்தம்பட்டியில் விவசாய நிலம் உள்ளது. அதில் இருந்த பனை மரங்களை நேற்று வெட்டிக்கொண்டிருந்தார்.
இதுகுறித்து மக்கள் தகவல்படி, அங்கு சென்ற, வாழப்பாடி தாசில்தார் ஜெயந்தி தலைமையில் வருவாய்த்துறையினர், பனை மரம் வெட்டுவதை தடுத்து நிறுத்தினர். மேலும் வெட்டி சாய்க்கப்பட்ட, 6 பனை மரங்களை கைப்பற்றினர். தொடர்ந்து முத்தம்பட்டி வி.ஏ.ஓ., கலைச்செல்வன் புகார்படி, வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் அரசு அனுமதியின்றி பனை மரங்களை வெட்டியதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி, சேலம் கலெக்டர் பிருந்தாதேவிக்கு, வருவாய்த்துறையினர் பரிந்துரைத்தனர்.

