/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேவூர் போலீசை கண்டித்து வருவாய்த்துறை ஆர்ப்பாட்டம்
/
தேவூர் போலீசை கண்டித்து வருவாய்த்துறை ஆர்ப்பாட்டம்
தேவூர் போலீசை கண்டித்து வருவாய்த்துறை ஆர்ப்பாட்டம்
தேவூர் போலீசை கண்டித்து வருவாய்த்துறை ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 16, 2025 02:02 AM
சங்ககிரி, வருவாய்த்துறை சார்பில், தேவூர் போலீசாரை கண்டித்து, சங்ககிரி தாலுகா அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி தலைமை வகித்தார். அதில் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறியதாவது:அரசிராமணி பிட் - 2 பகுதியில், கடந்த, 7 இரவு, புறம்போக்கு நிலத்தில் பாறை கற்களை உடைப்பதாக கிடைத்த தகவலால், தேவூர் ஆர்.ஐ., கனகராஜ், கோனேரிப்பட்டி அக்ரஹாரம் வி.ஏ.ஓ., முனியப்பன் அங்கு சென்றனர்.
அப்போது அவர்களது இரு பைக்குகளை, அப்பகுதி விவசாயி கந்தசாமி பிடித்து வைத்துக்கொண்டார். இதுகுறித்து புகார் கொடுத்ததால், தேவூர் போலீசார், கந்தசாமி மீது வழக்குப்பதிந்தனர். ஆனால் வருவாய்த்துறையினர் தாக்கியதாக கூறி கந்தசாமி, இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.
அவர் சிகிச்சைக்கு பின் தலைமறைவாகிவிட்டார். ஒரு வாரமாகியும் அவரை கைது செய்யாத போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்; தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள்; தமிழ்நாடு கிராம ஊழியர்; நில அளவையாளர்; தமிழ்நாடு கிராம அலுவலர் முன்னேற்றம் ஆகிய சங்கத்தினர் பங்கேற்றனர்.
பின், வருவாய்த்துறை கூட்டமைப்பு நிர்வாகிகள், ஆர்.டி.ஓ., லோகநாயகியை சந்தித்து, கந்தசாமியை கைது செய்ய வலியுறுத்தினர்.