/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
2ம் நாளாக வருவாய்த்துறையினர் போராட்டம் பல்வேறு பணிகள் முடங்கியதால் மக்கள் அவதி
/
2ம் நாளாக வருவாய்த்துறையினர் போராட்டம் பல்வேறு பணிகள் முடங்கியதால் மக்கள் அவதி
2ம் நாளாக வருவாய்த்துறையினர் போராட்டம் பல்வேறு பணிகள் முடங்கியதால் மக்கள் அவதி
2ம் நாளாக வருவாய்த்துறையினர் போராட்டம் பல்வேறு பணிகள் முடங்கியதால் மக்கள் அவதி
ADDED : நவ 28, 2024 01:15 AM
2ம் நாளாக வருவாய்த்துறையினர் போராட்டம்
பல்வேறு பணிகள் முடங்கியதால் மக்கள் அவதி
சேலம், நவ. 28-
சேலம் மாவட்டத்தில், 2ம் நாளாக வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டதால், பல்வேறு பணிகள் முடங்கி மக்கள் அவதிக்குள்ளாகினர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுதும், நேற்று முன்தினம், காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. 2ம் நாளான நேற்று, சேலம் கலெக்டர் அலுவலக பின்புறம், சங்க கட்டட வளாகம் முன், ஏராளமானோர், பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் அருண் பிரகாஷ் தலைமை வகித்தார். இதில் வருவாய்த்துறையினர், தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி கூறியதாவது:
காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட, 9 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி தர வலியுறுத்தி வருகிறோம். இதுவரை நடவடிக்கையின்றி, 3ம் கட்ட போராட்டத்துக்கு தள்ளப்பட்டு, 2ம் நாளாக நீடித்து வருகிறது. தமிழகம் முழுதும், 11,000 வருவாய் அலுவலர்கள், சேலம் மாவட்டத்தில், 600க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், இணையதள வழி சேவை, சான்றிதழ் சரிபார்த்தல், தேர்தல் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடங்கியுள்ளன. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் தமிழக அரசு, எங்கள் நிர்வாகிகளை அழைத்து பேசி, கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும். இல்லையெனில் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.