/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நெல்லுக்கு 'செஸ்' வரியை ரத்து செய்ய அரிசி ஆலை உரிமையாளர் வலியுறுத்தல்
/
நெல்லுக்கு 'செஸ்' வரியை ரத்து செய்ய அரிசி ஆலை உரிமையாளர் வலியுறுத்தல்
நெல்லுக்கு 'செஸ்' வரியை ரத்து செய்ய அரிசி ஆலை உரிமையாளர் வலியுறுத்தல்
நெல்லுக்கு 'செஸ்' வரியை ரத்து செய்ய அரிசி ஆலை உரிமையாளர் வலியுறுத்தல்
ADDED : நவ 28, 2024 06:49 AM
சேலம்: நெல்லுக்கு, 'செஸ்' வரியை ரத்து செய்ய, அரிசி ஆலை உரிமை-யாளர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
சேலம் அரிசி ஆலை உரிமையாளர் சங்க, 62ம் ஆண்டு நிறைவு விழா கூட்டம், தலைவர் உதயகுமார் தலைமையில் நடந்தது.
அதில் அரிசி, கோதுமை மற்றும் ஆயில் மில்லுக்கு அனுப்பப்-படும் தவிடு உள்ளிட்ட பொருட்கள் மீது
விதிக்கப்பட்டுள்ள, 5 சதவீத ஜி.எஸ்.டி., வரியை திரும்ப பெற, தமிழக அரசு அழுத்தம் கொடுத்தல்;
விவசாயிகளிடம் நேரடியாக வாங்கும் நெல்லுக்கு செலுத்தும், 'செஸ்' வரியை ரத்து செய்ய, மாநில அரசை
கேட்டுக்-கொள்ளுதல்; 99 சதவீத சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், வங்கியில் கடன் பெற்று
இயங்குவதால், அந்த கடனுக்கு ரிசர்வ் வங்கி உயர்த்திய, 2 சதவீத வட்டியை திரும்ப பெற வேண்டும்.ஆலைகளில் மின்கட்டண உயர்வால், ஆண்டுக்கு கூடுதலாக பல லட்சம் ரூபாய் செலுத்துவதால் தமிழக
அரசு பரிசீலித்தல்; சொந்த நிலம் வாங்கி கடைகள் கட்டி தொழில் செய்ய வழியற்றோர், உள்-ளாட்சி கடைகளை
வாடகைக்கு எடுத்து தொழில் செய்யும் நிலையில், அதற்கு மிகப்பெரிய வாடகை உயர்வை, உள்ளாட்சி துறை
அறிவித்துள்ளதால் மறுபரிசீலனை செய்தல்; 12க்கும் மேற்-பட்ட அரசு துறைகளின் உரிமம் பெற்று
ஆலைகளை நடத்தும் நிலையில், புதுப்பித்தல் என்றாலே அரசு அலுவலர்களுக்கு ஆண்-டுதோறும் கையூட்டு
செலுத்தும் அவல நிலையில் தொழிற்சா-லைகள் இயங்குகின்றன. அதனால் வணிக வரி, வருமான வரித்-துறை
நிரந்தர பதிவு முறையை கொண்டு வருதல் என்பன உள்-பட, 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.துணைத்தலைவர் தமிழ்செல்வன், செயலர் ஏ.முருகேசன், பொரு-ளாளர் எஸ்.முருகேசன் உள்பட பலர்
பங்கேற்றனர்.