தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரகளையில் ஈடுபட்டவர் கைது

ரகளையில் ஈடுபட்டவர் கைது

ரகளையில் ஈடுபட்டவர் கைது


ADDED : ஜன 02, 2025 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2025 01:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தலைவாசல், ஜன. 2-

தலைவாசல் அருகே வீரகனுார், மீனவர் தெருவை சேர்ந்த, மணி மனைவி கார்த்திகா, 33. இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணிக்கு வீடு முன் கோலம் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அம்பேத்கர் நகரை சேர்ந்த ஜீவா உள்பட, 4 பேர், புத்தாண்டு வாழ்த்து கூறியபடி பைக்கில் வேகமாக சென்றனர். ஆனால் வீடு முன் இருந்த பக்கெட், சேரை எட்டி உதைத்து, துாக்கி வீசியுள்ளனர். தட்டிக்கேட்ட கார்த்திகாவை, தகாத வார்த்தையில் திட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.

இதுகுறித்து கார்த்திகா புகார்படி வீரகனுார் போலீசார், 4 பேர் மீதும், 3 பிரிவுகளில் வழக்கு பதிந்தனர். தொடர்ந்து ஜீவாவை கைது செய்தனர். அதேபோல் ஜீவா, 'எங்களையும் திட்டினர்' என அளித்த புகாரில், 4 பேர் மீது போலீசார் வழக்குப்

பதிந்தனர்.

'போதை' கும்பல் அட்டகாசம்

ஆத்துார், முல்லைவாடியில் நேற்று முன்தினம் நள்ளிரவில், மதுபோதையில் வந்த 5 பேர், தண்ணீர் தொட்டி, வீடு முன் இருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தினர். தட்டிக்கேட்ட மக்களையும், தகாத வார்த்தையில் திட்டிச்சென்றனர். இதுகுறித்து மக்கள் புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார், ரகளை

செய்தவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us