/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வேகத்தடை அகற்றத்தால் விபத்து ஏற்படும் ஆபத்து
/
வேகத்தடை அகற்றத்தால் விபத்து ஏற்படும் ஆபத்து
ADDED : நவ 06, 2024 01:44 AM
வேகத்தடை அகற்றத்தால் விபத்து ஏற்படும் ஆபத்து
பனமரத்துப்பட்டி, நவ. 6-
சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை, மல்லுார் பிரிவில் பாலம் கட்டுமானப்பணி நடக்கிறது. சேலத்தில் இருந்து செல்லும் பிரதான சாலை மூடப்பட்டு சர்வீஸ் சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. ஆனால் மல்லுார் செல்வதற்கு வாகனங்கள் திரும்பும்போது, அதற்கு பின்புறம் வரும் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன. கடந்த அக்., 1ல் மொபட் மீது லாரி மோதி, ஒரே குடும்பத்தில், 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மல்லுார் பிரிவுக்கு முன், சர்வீஸ் சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டதால் விபத்து அபாயம் குறைந்தது.
ஆனால் கடந்த மாதம் முதல்வர் ஸ்டாலின் சேலத்தில் இருந்து நாமக்கல் சென்றார். அப்போது பாதுகாப்பு கருதி வேகத்தடை அகற்றப்பட்டது. அந்த இடத்தில் மீண்டும் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் வாகனங்கள் வேகத்தை குறைக்காமல் செல்வதால், மல்லுார் பிரிவில் திரும்பும் வாகனங்கள், விபத்தில் சிக்கும் ஆபத்து நிலவுகிறது. அங்கு வேகத்தடை அமைக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.