/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
/
காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
ADDED : அக் 14, 2024 04:56 AM
சேலம்: சேலம் மாநகராட்சி, 57வது வார்டில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
அங்குள்ள சபாபதி கவுண்டர் காட்டில், 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள், நேற்று காலை காலிக்குடங்க-ளுடன் களரம்பட்டி பிரதான சாலையில் குடிநீர் கேட்டு மறியலில் ஈடுபட்டனர். கிச்சிப்பாளையம் போலீசார் பேச்சு நடத்தினர்.அப்போது பெண்கள், 'இப்பகுதியில் குடிநீர் சரிவர வழங்குவது இல்லை. மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. வேறு வழியின்றி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம்' என்றனர்.வார்டு கவுன்சிலர் சீனிவாசன், மாநகராட்சி அதிகாரிகள், 'குடிநீர் குழாய் உடைந்துவிட்டது. விடுமுறையாக உள்ளதால் சரிசெய்ய ஊழி-யர்கள் வரவில்லை. இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கப்-படும். அவசர தேவைக்கு லாரி மூலம் குடிநீர் வினியோகிக்கப்-படும்' என்றனர். இதனால் பெண்கள் மறியலை கைவிட்டனர்.