/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொழிலாளி தற்கொலை வேளாண் அலுவலர் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்
/
தொழிலாளி தற்கொலை வேளாண் அலுவலர் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்
தொழிலாளி தற்கொலை வேளாண் அலுவலர் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்
தொழிலாளி தற்கொலை வேளாண் அலுவலர் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்
ADDED : நவ 07, 2025 01:08 AM
ஆத்துார், ஆத்துார், முல்லைவாடியை சேர்ந்தவர் நாகராஜன், 30. உழவர் சந்தையில் மூட்டை துாக்கும் தொழிலாளியாக பணிபுரிந்தார். நேற்று காலை, சந்தைக்கு சென்றபோது, 'நாகராஜன் மதுபோதையில் உள்ளதால், வீட்டுக்கு செல்லுங்கள்' என, வேளாண் அலுவலர் சுரேந்தர், 'மைக்' மூலம் தெரிவித்தார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து, தொழிலாளியை வீட்டுக்கு அனுப்பினார்.
மனமுடைந்த நாகராஜன், வீட்டுக்கு சென்ற நிலையில் தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை, ஆத்துார் டவுன் போலீசார் மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் மதியம், 3:10 மணிக்கு, நாகராஜனின் உறவினர்கள், 100க்கும் மேற்பட்டோர், ஆத்துார் அரசு மருத்துவமனை முன், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது அவர்கள், 'வேளாண் அலுவலர், மக்கள் முன்னிலையில், 'மைக்' மூலம் கூறியதால்தான், நாகராஜன் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். வேளாண் அலுவலரை கைது செய்ய வேண்டும்' என்றனர்.
அதற்கு போலீசார், 'இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதி அளித்தனர். இதனால், 3:50 மணிக்கு மறியலை கைவிட்டனர். இச்சம்பவத்தால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

