ADDED : நவ 07, 2025 11:53 PM

சேலம்: தம்பியை அம்மிக்கல்லால் அடித்து கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
சேலம், பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி கஸ்துாரி, 70. இவர்களுக்கு ஐந்து மகன்கள், இரு மகள்கள் இருந்தனர். அவர்களில் நான்காவது மகன் தியாகராஜன், 34, பெயின்டர். இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
இவரது அண்ணன் சந்தோஷ்குமார், 45; கூலித்தொழிலாளி. தியாகராஜனும், சந்தோஷ்குமாரும் அடிக்கடி மது அருந்துவர். நேற்று மதியம் தாய் வீட்டில் தியாகராஜன் இருந்தபோது, மது அருந்திவிட்டு சந்தோஷ்குமார் அங்கு வந்தார்.
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார், அம்மிக்கல்லால் தியாகராஜனை தாக்கிஉள்ளார். தியாகராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின், டாஸ்மாக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்த சந்தோஷ்குமாரை, அம்மாபேட்டை போலீசார் கைது செய்தனர்.

